அடித்து துவைக்கும் கனமழை..3 மணி நேரம் தாமதமான விமானம்..ஏர்போர்ட்டில் பரபரப்பு | Chennai

x

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு திருச்சி செல்ல வேண்டிய விமானம் கோழிக்கோடு பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து திருச்சி செல்லும். ஆனால் கோழிக்கோட்டில் கனமழை காரணமாக தாமதம் என கூறப்பட்டது. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை 9.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் விமானம் திருச்சிக்கு மாற்றி அனுப்பப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானமும், மதுரை செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. காலை 11.15 மணிக்கு செல்ல வேண்டிய மதுரை விமானம் ரத்து செய்யபட்டது. 1.10 மணிக்கு திருச்சி செல்ல வேண்டிய விமானம் மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்