தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை...வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூர் ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்புவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக, இடி மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்