"எம்ஜிஆர் ஆட்சியையும், திமுக ஆட்சியையும் கலைத்துள்ளார்" - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

x

356வது சட்டப்பிரிவை இந்திரா காந்தி 50 முறை தவறாக பயன்படுத்தியதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாத‌த்தில், உறுப்பினர்களுக்கு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மத்திய அரசின் தற்போதைய நிதி வருவாய், கூடுதல் செலவினத்தை ஈடுகட்ட போதுமானதாக உள்ளதாக தெரிவித்த நிர்மலா, அரசு எடுத்த நடவடிக்கைகளால், வாரா கடன் விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5 புள்ளி 9 சதவீதமாக குறைந்துள்ளது என்றார். உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றால், தனியார் முதலீட்டாளர்கள் மீண்டும் வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் சாசனம் 356 சட்டப்பிரிவை 50 முறை இந்திரா காந்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி, திமுக ஆட்சி, கேரளாவில் நம்பூதிரி பாட் ஆட்சி கலைக்கப்பட்டது என்றார்


Next Story

மேலும் செய்திகள்