"ஒரு IPSக்கான பேச்சும் நடவடிக்கையும் அவரிடம் இல்லை" - அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு

ஒரு IPSக்கான பேச்சும் நடவடிக்கையும் அவரிடம் இல்லை - அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு
x

அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் 1014 மற்றும் 1054 ஆம் ஆண்டு ராஜேந்திரன் சோழர் காலத்தில் ஸ்ரீ மங்கள லக்ஷ்மி சமேத அழகுராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.

நாளடைவில் கோவில் முழுவதும் சிதலமடைந்ததால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர்.

53 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு 53 வீடுகளையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தும் பணி இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மீண்டும் இக்கோவில் புனரமைக்கும் பணிக்காக 7 கோடி ரூபாய் அளவில் பணிகள் துவங்கப்பட்டது.

இதனை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கைத்தறி மற்றும் தொழில் அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 3943 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டது.

ஒரு லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கோவில் நிலங்கள் தற்பொழுது வேலை அமைக்கும் பணிகள் துவங்கியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கோவில்களில் கிரேன் மூலமாகவும் மற்றும் வினோதமான வழிபாடுகள் செய்யும் பொழுது அதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் முன்பு தன்னை முன்னிறுத்திக் கொள்ளவே சர்ச்சைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து வருகிறார்.

ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரி போல் சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.

"தன்னை முன்னிறுத்தி கொள்ளவே இந்த சர்ச்சை பேச்சு எல்லாம்"

"ஒரு IPSக்கான பேச்சும் நடவடிக்கையும் அவரிடம் இல்லை" - அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு


Next Story

மேலும் செய்திகள்