அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

x

ஆவின் நிறுவனத்தில் நாள்தோறும் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின், அரை லிட்டர் பாலில் 70 மில்லி அளவைக் குறைத்து, ஒரு மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம், 500 மில்லி பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த மோசடி மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முழுமையான நீதி விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்