திராட்சை விலை கேட்டு திகிலான ஜிம்பாய்ஸ்...அதிக விலை கேட்டதாக கடை சூறையாடல்...

x

இது சீர்காழி காவல் நிலையமா இல்லை ஆணழகன் போட்டி நடக்கும் அரங்கமானு சந்தேகம் எழுற அளவுக்கு, ஒட்டு மொத்த ஜிம் பாய்ஸும் ஸ்டேஷனில் ஆஜராகி இருந்தனர். ஸ்டேஜில போஸ் கொடுக்க வேண்டியவங்க ஸ்டேஷன்ல இப்படி கூனி குறுகி உட்காந்து இருக்க காரணம் ஒரு அடிதடி பிரச்சினை. புதுச்சேரிய சேர்ந்த இந்த பாடி பில்டர் கும்பல், சீர்காழியில நடந்த போட்டியில கலந்துகிட்டு கோப்பையை வென்றிருக்காங்க. ஜெயிச்ச சந்தோசத்த மது குடிச்சி கொண்டாட நினைச்சவங்க, சரக்க வாங்கிட்டு ஒரு பழக்கடையில சைடிஷ்ஷா புரூட்ஸ் வாங்கியிருக்காங்க. கடைகாரரும் வாங்குன பழத்துக்கு விலைய சொல்லியிருக்காரு. திராட்சையோட விலையை கேட்டு திகிலடிச்சி போன அந்த கும்பல், உடனே கடையில இருந்தவங்ககிட்ட வாக்கு வாதத்துல ஈடுபட்டிருக்காங்க. இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் வெடிச்சிருக்கு. மொத்த ஜிம் பாய்ஸூம் காஞ்ச மாடு கம்புல புகுந்த கணக்கா கடையை அடிச்சி உடைச்சி தும்சம் பண்ணியிருக்காங்க.

நடந்த அநியாயத்தை பாத்து கொதிச்சி போன அக்கம் பக்கத்தினர் உடனே ஒன்னு கூடி பாடி பில்டர்ஸ்ச புடிக்க நினைச்சிருக்காங்க. அதுக்குள்ள அந்த கும்பல் வேண்ல ஏறி சிட்டா பறந்திருக்கு. சினிமாவையே மிஞ்சுற அளவுக்கு நடந்த ச்சேஷிங்குக்கு அப்புறம், வேனோட அந்த கும்பல ஊர்மக்கள் சுற்றி வளைச்சி காவல்நிலையத்துல ஒப்படைச்சிருக்காங்க. மது போதை புத்திய மழுங்கடிச்சதால இப்போ இந்த பாடி பில்டர் கும்பல் ஜெயில்ல தண்டால் எடுத்துகிட்டு இருக்கு.


Next Story

மேலும் செய்திகள்