வழி விட மறுத்த அரசுப் பேருந்து...பொதுமக்களை சுட முயன்ற ராணுவத்தினர் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

வழி விட மறுத்த அரசுப் பேருந்து...பொதுமக்களை சுட முயன்ற ராணுவத்தினர் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில், ராணுவ போர் தடவளங்களை ஏற்றி வந்த வாகனத்திற்கு வழி விட மறுத்ததாக, பொதுமக்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூரில் இருந்து ராணுவ போர் தடவாளங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவத்தினர், பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, தமிழக அரசுப் பேருந்து ராணுவ வாகனத்திற்கு வழிவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர், அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், சாலைக்கு நடுவே வாகனத்தை நிறுத்தி, ராணுவத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக பொதுமக்களும் களத்தில் இறங்கினர். இந்த நிலையில், திடீரென பொதுமக்களை நோக்கி, ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவத்தினர் மன்னிப்பு கேட்கும் வரை வாகனத்தை அனுப்ப முடியாது எனக்கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், ராணுவத்தினர் மன்னிப்பு கேட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்