"ஆளுநர் விவகாரம் - முதல்வர் முடிவெடுப்பார்" - அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழ்நாடு முழுவதும் விளையாட்டினை இயக்கமாக மாற்றவே முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடத்தப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், சென்னை மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் விளையாட்டு வகுப்பை கட்டாயமாக்குவது குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்து இருப்பதாக தெரிவித்தார். அமைச்சரவை இலாகா மாற்றத்திற்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்த கேள்விக்கு, அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.
Next Story