"அரசியல்வாதியாக மாறும் ஆளுநர்"..19 பக்க பரபரப்பு புகார்..ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்

x


அதில், ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.


மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க கூடாது எனவும்,


நாகாலாந்து ஆளுநராக இருந்த போதும் அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஊழல் புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்றும்,


தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆளுநரின் செயல்பாடுகள், அவர் அப்பதவிக்கு தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்,


குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் வாதியாக மாறும் ஒரு ஆளுநர் அப்பதவியில் தொடர கூடாது என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

card 10

"மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை தன் பிளவு படுத்தும் பேச்சுகளின் மூலம் ஆளுநர் தெளிவுபடுத்துகிறார் என்றும்,


இந்தியா ஒற்றை மதத்தை சார்ந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்து அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளார்.


ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது பொருத்தமானதாக உள்ளதா? என்பதை குடியரசு தலைவர் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,


மலிவான அரசியல் செய்வதில் ஆர்வம் கொண்ட ஆளுநர் ரவி, பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் என்பதையும் தெரிவிக்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.


"சனாதனத்தை புகழ்வது, திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது என தமிழ் மக்களின் உணர்வை ஆளுநர் புண்படுத்தி உள்ளார் என்றும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


"ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும்"


ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றது முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுடன் கருத்தியல், அரசியல் போரில் ஈடுபடுகிறார்

மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க கூடாது


நாகாலாந்து ஆளுநராக இருந்த போதும் அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை - முதலமைச்சர்


ஊழல் புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்


தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்


ஆளுநரின் செயல்பாடுகள், அவர் அப்பதவிக்கு தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்


சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறார் - முதலமைச்சர்


குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறார் - முதலமைச்சர்


அரசியல் வாதியாக மாறும் ஒரு ஆளுநர் அப்பதவியில் தொடர கூடாது - முதலமைச்சர்


மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை தன் பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் ஆளுநர் தெளிவுபடுத்துகிறார்


இந்தியா ஒற்றை மதத்தை சார்ந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்து அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்


ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது பொருத்தமானதாக உள்ளதா? என்பதை குடியரசு தலைவர் முடிவுக்கே விட்டு விடுகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்


மலிவான அரசியல் செய்வதில் ஆர்வம் கொண்ட ஆளுநர் ரவி, பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர் என்பதையும் தெரிவிக்கிறோம்


சனாதனத்தை புகழ்வது, திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது என தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி உள்ளார் ஆளுநர்



Next Story

மேலும் செய்திகள்