"ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" -வைகோ பரபரப்பு | Vaiko | RN Ravi

x

தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி, அக்கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வைகோ, ஆளுநரை வெளியேற்ற போராடிய நாகலாந்து மக்களை போன்று தமிழ்நாட்டு மக்களும் கிளர்ந்து எழ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்