WhatsApp பயனர்களை குட் நியூஸ்.. - மொத்தமாக மாற்றப்போகும் புது அப்டேட் - என்ன தெரியுமா?

x

WhatsApp பயனர்களை மகிழ்விக்க புதிய தகவல் ஒன்றை WhatsApp நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதுபற்றி பார்க்கலாம்.... உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலி, கோடிக்கணக்கான மக்களால் ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு பிரையன் ஆக்டன் ( brian Acton) மற்றும் ஜேன் கோம் ( jan koum ) ஆகியோரால் வெறும் 55 பயனாளர்களை வைத்து உருவாக்கப்பட்டது இந்த வாட்ஸ்அப் செயலி.

வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கிய நிலையில், வாட்ஸ்அப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். பயனாளர்களின் எண்ணிக்கையை அப்படியே தக்கவைத்துக்கொள்ள வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.அந்த வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக WhatsApp நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

அதாவது, வாட்ஸ்அப்பில் username வசதியை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், பேஸ்புக்கில் usernameஐ வைத்து பயனாளர் யார் என்பதை தெரிந்துகொள்வது போன்று, இனி வாட்ஸ்அப்பிலும் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக, WhatsApp username மற்றும் redesigned settings interface உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது அக்கவுண்ட்டில் username வைத்துக்கொள்ளலாம். இதனை WhatsApp செட்டிங் _ profile ஆப்ஷன்களில் இயக்க முடியும்.இந்த புதிய அம்சங்களின் மூலம் பயனாளர்களின் தனியுரிமை பாதுகாக்கபடுவதோடு, செல்போன் எண் மூலம் பயனாளர்களை அறிந்துகொள்வதற்கு பதிலாக username மூலம் அறிந்து கொள்ளலாம்....


Next Story

மேலும் செய்திகள்