அரசு அதிகாரிகளுக்கு குட் நியூஸ்.. கட்டுப்பாடுகள் திரும்ப வாபஸ்..

x

கொரோனா காலக்கட்டத்தில் செலவினங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த சில வழிமுறைகள் திரும்பப் பெறப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்த காலகட்டத்தில் நிதிச்சுமையை குறைப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 2020 மற்றும் 21ம் ஆண்டு கால கட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50% அரசு குறைத்தது. அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினப்படி ஆகியவையும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்படி, அரசு பணியாளர்களின் பொது மாறுதல் மற்றும் பயண செலவு ஆகியவற்றுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு செலவில் அதிகாரிகள் அரசு முறை பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்