"என் காதலியை மீட்டு தாருங்கள்" - கோர்ட்டில் சேட்டை செய்த திருமணமானவர் - அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்

x

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த எச். ஷமீர் கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காதலியான அஞ்சனாவை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் நீதிபதி சோஃபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஷமீருக்கு ஏற்கனவே சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அஸ்வதி என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியது.

இந்த மனு மீதான விசாரணை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்தது. விவாகரத்துக்கு மனைவி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விவாகரத்து வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இது மனுவில் தெரிவிக்கப்படவில்லை என்பதால், நீதிமன்றம் ஷமீருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது. மேலும் தகவல்களைத் மறைத்ததற்கு கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ஷமீர், அபராதத்தை செலுத்துவதாக கூறினார். மேலும், அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்தாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னர், வீட்டு சிறையில் இருப்பதாக மனுவில் கூறிய அஞ்சனாவிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு அக்டோபர் 7-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைக்கப்ப்டடது.


Next Story

மேலும் செய்திகள்