காதலன் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட காதலி
திருப்பத்தூர் மாவட்டம், எம்.கே கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர், தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இவரும், ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், முருகனுக்கு வேறு பல பெண்களுடன் தொடர்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து அவரிடம் மாணவி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், முருகன் மாணவியை திட்டி அனுப்பியதால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளிக்கப்பட்டுள்ளது.
Next Story