காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி - "அந்த பெண்ணை மன்னிக்கவே கூடாது.." - நடிகை பூர்ணா ஆதங்கம்

x

கேரளாவில் காதலனை கொலை செய்த பெண்ணுக்கு மன்னிப்பு கொடுக்காமல் அவர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என நடிகை ஷம்னா காசிம் என்கிற பூர்ணா கருத்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் கல்லூரி மாணவனான ஷரோன்ராஜை அவரது காதலியே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகை பூர்ணா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கொலை செய்த அந்த பெண்ணை மன்னிக்கவே கூடாது என்றும், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்