ஜி-20 ஆலோசனைக் கூட்டம்.."அதிமுக சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி" - ஈபிஎஸ் அறிக்கை

x

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் மோடியின் கடின உழைப்பால், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் உயர்மட்ட பிரமுகர்களுடன் நல்லுறவைப் பேணி, இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியதன் காரணமாக, ஜி-20ன் தலைமைப் பொறுப்பு சாத்தியமானது என குறிப்பிட்டுள்ளார்.

இது 130 கோடி இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது என்றும், ஜி-20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்துள்ளார்.

இதில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்