பம்பரம் முதல் பல்லாங்குழி வரை.. நம்மூர் விளையாட்டை பின்னி பெடல் எடுத்த "செஸ்" வீரர்கள்

x

பம்பரம் முதல் பல்லாங்குழி வரை.. நம்மூர் விளையாட்டை பின்னி பெடல் எடுத்த "செஸ்" வீரர்கள்.

செஸ் விளையாட்டோடு சேர்த்து 'ஆடு புலி ஆட்டம்' , 'பல்லாங்குழி', 'பம்பரம் சுற்றுவது' என நம்ம ஊரு விளையாட்டுகளிலும் அசத்தி , நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன, வெளிநாட்டு செஸ் வீரர்கள்.

பண்பாடு, கலாச்சாரத்தில் மட்டுமல்ல விளையாட்டில்

கூட ஒரு தனித்துவத்தோடு திகழ்ந்தவர்கள் தமிழர்கள். அந்த வகையில் உடல் வலிமை, மன வலிமை, புத்தி கூர்மை என

பல தரப்பட்ட விளையாட்டுக்களை மண்மனத்தோடு பயிற்றுவித்தவர்கள் நமது முன்னோர்கள்.

இன்று புத்தி கூர்மை அதிகம் கொண்டவர்கள் விளையாடும் விளையாட்டாக பார்க்கப்படுகிறது, செஸ். ஆனால் நம் முன்னோர்கள் விளையாடிய பல விளையாட்டுகளும்... மூளையை சுறுசுறுப்பாக கூடியவை தான்.

இதனை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டினரும் ஏற்றுக்கொண்டிருப்பதை காட்டுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்