ஒரே வீட்டை பலரிடம் வாடகைக்கு காண்பித்து மோசடி... சினிமா பாணியில் ரூ.36 லட்சம் மோசடி செய்த கும்பல்

x

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வாடகைக்கு வீடு வேண்டும் எனக்கூறி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதைபார்த்த அதே பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் மணிகண்டனை தொடர்பு கொண்டு, முத்தமிழ்நகரில் உள்ள வீடு ஒன்றினை காண்பித்துள்ளார். இந்நிலையில், 5 லட்ச ரூபாய்க்கு வீட்டினை லீசுக்கு விட உள்ளதாக கூறி, 2 லட்ச ரூபாயினை மகாராஜா முன்பனமாக பெற்றுள்ளார். இதனிடயே நீண்ட காலமாகியும் வீட்டு ஒப்படைக்கப்படாததால் பணத்தை திரும்ப கேட்டு சென்ற மணிகண்டன் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், ஒரே வீட்டினை பலரிடம் காண்பித்து சுமார் 36 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 3 பேரை சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான மகாராஜவை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்