திருப்பதி கோயில் வரலாற்றில் முதல் முறையாக... - தேவஸ்தான அதிகாரிகள் சொன்ன தகவல்
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ஏழு கோடியே 68 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று, பக்தர்கள் 69 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ஏழு கோடியே 68 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஏழுமலையான் கோயில் உண்டியல் வரலாற்றில், ஒரே நாளில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட அதிக தொகை என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story