கொத்து கொத்தாக 40 பேரை அடித்து இழுத்து சென்ற வெள்ளம் - தசரா விழாவில் நேர்ந்த கோரம்

x

மேற்கு வங்கத்தில் துர்கா தேவி சிலையை கரைக்க முயன்ற போது, மால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. மேற்குவங்கம், ஜல்பைகுரி பகுதியில் தசரா விழா கொண்டாட்டமாக மால் ஆற்றில் துர்கா தேவி சிலை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது, திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால், அதில் இருந்த 40 பேர் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்து விரைந்த மீட்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று 2வது நாளாக மாயமானவர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்