"எங்க வாழ்க்கையே இதுலதான் ஓடுது.. பிள்ளைகளை எப்படி படிக்க வைப்போம்..?" - சென்னையில் கதறும் மீனவர்கள்

x

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகளும், உணவகங்களும் மீனவர்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன. நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், மேலும், போக்குவரத்து நெரிசல் உருவாவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம், நொச்சிநகர், டுமிங்குப்பம், பவானிகுப்பம், முள்ளிக்குப்பம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மீனவமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் லூப் சாலையில் இருந்த சாலையோர மீன் கடைகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, நடைபாதை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. லூப் சாலையில் மட்டும் 350க்கும் மேற்பட்ட மீன் கடைகள் மற்றும் மீன் உணவகங்கள் செயல்படும் நிலையில், உரிய அனுமதி இன்றி செயல்படும் கடைகள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லூப் சாலையில் இருபுறங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதற்கு மீனவ சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்