100 ரூபாய்க்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வட்டி... ஆசையாக முதலீடு செய்த பொதுமக்கள் - ரூ. 50 கோடியோடு குடும்பத்துடன் கம்பி நீட்டிய நபர்

x
  • ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்திதைச் சேர்ந்த நகராஜ் என்பவர், தனது வீட்டிலேயே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
  • இதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, 100 ரூபாய்க்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வட்டி தருவதாக தெரிவித்துள்ளார்.
  • இதனை நம்பிய பொதுமக்கள் பலரும், 50 கோடி ரூபாயக்கு மேல், அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
  • கடந்த 3-ம் தேதி முதல், நாகராஜும், அவரது குடும்பத்தாரும் தலைமறைவாகியுள்ளனர்.
  • இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், நாகராஜ் வீட்டை முற்றுகையிட்ட நிலையில், சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
  • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 1-ம் தேதி அன்றே, வங்கிகளில் தனது கணக்கில் இருந்த பணத்தை நாகராஜ் எடுத்துள்ளது தெரியவந்தது.
  • அதன் அடிப்படையில் திட்டமிட்டே மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியானதை அடுத்து, தலைமறைவாக உள்ள நாகராஜையும், அவரது குடும்பத்தினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்