ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் - உயர் நீதிமன்றத்தில் மனு
ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் - உயர் நீதிமன்றத்தில் மனு
ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி, அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சில சொத்துகளை தனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக சசிகலா கூறியதாகவும், சிறையில் இருந்து வந்த பிறகு அவர் சந்திக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story