சிக்கிய பிரபல பிரியாணி கடை...சிக்கன் பிரியாணி முழுவதும் புழு..ராமநாதபுரத்தில் பரபரப்பு
பிரியாணிகளின் ராஜா என போர்டு வைத்து வியாபாரம் பார்த்த கடையில் வாடிக்கையாளர் சாப்பிட்ட பிரியாணியில் புழுராமநாதபுரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வாடிக்கையாளர்கள் வாங்கி சாப்பிட்ட பிரியாணியில் புழு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது பிரியாணி வகைகள் இதில் உணவகங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் விதவிதமான வகைகளில் பிரியாணிகளை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர் அதனை அடிப்படையில் ராமநாதபுரம் மட்டுமன்றி தமிழக முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்ட பிரபல பிரியாணி கடையில் கோயமுத்தூரை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் இருவர் இரண்டு முட்டை பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர்
அப்போது அவர்கள் சாப்பிட்ட பிரியாணியில் புழு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் உடனடியாக உணவக மேலாளரிடம் கேட்டபோது சரியான பதில் தராததால் அதிர்ச்சி அடைந்த புகைப்பட கலைஞர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்
புகாரின் பேரில் வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி உணவகத்தில் பிரியாணி மற்றும் சிக்கன்,முட்டை உள்ளிட்டவர்களை ஆய்வு செய்து கூறும்போது புகார் அளிக்கப்பட்ட பிரியாணியை எடுத்து சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அதன் முடிவு வந்தவுடன் அதனுடைய முழு விவரம் தெரியும் தெரிவித்தார் இதுகுறித்து பிரியாணி வாங்கி சாப்பிட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கூறும் பொழுது நல்லா இருக்குமே என நம்பி சென்றோம் ஆனால் இதுபோன்று நடந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் மேலும் இது குறித்து கேட்ட கடை நிர்வாகி சரியான பதில் தரவில்லை என்பதால் புகார் அளித்தோம் என தெரிவித்தார் மேலும் தனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது ஆகவே இந்த கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்....