"பார்த்தாலே பிணி தீரும்" யாரு சாமி நீ.. பாம்பு படுக்கையில் பெருமாள் கோலத்தில்.. கால்களை அமுக்கி விடும் மனைவிகள்

x

தெலங்கானாவில் இந்து கடவுளின் அவதாரம் என கல்லாக்கட்டிய தமிழக போலி சாமியாரை போலீசார் கொத்தாக தூக்கிச் சென்றிருக்கிறார்கள்...

சமீபகாலமாக, போலி சாமியார்கள் கூட்டம் இந்து கடவுள் வேடமிட்டு செய்யும் அட்டூழியம்...இது புதுசாவுல இருக்கு என வடிவேலு டயலாக்கை நினைவு படுத்துகிறது.

கடவுள் வேடமிட்டு விதவிதமாக யூடியூப்பில் வெளியிடு வதும், ஏமாற்றுவதை கேட்டால் சாபமிடுவதுவமாக அவர்களது அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...

எந்த கேள்வியும் இல்லாமல் அப்பாவி மக்களை ஏமாற்றி கல்லாக்கட்டும் துறையாக இருப்பதால்தான் என்னவோ... ஒரு ரூபாய்க்கு குங்குமத்தை வாங்கிவிட்டு மோசடி கும்பல் எல்லாம் சாமியார் என சொல்லி திரிகிறது.

இப்படி பல மோசடிகளில் சிக்கி, பாலியல் பலாத்காரத்திலும் சிக்கிய கேடி சாமியார்கள் பல...

இப்படிதான் தெலுங்கானாவில் கடையை விரித்து கல்லாக் காட்டியிருக்கிறார் திருவண்ணாமலையை சேர்ந்த சந்தோஷ் குமார்...

தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி பகுதியில் ஆசிரம் நடத்திய சந்தோஷ்குமார், தானே விஷ்ணுவின் அவதாரம் என கெட்டப் போட்டு மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

பாம்பு படுக்கையில் சயன கோலத்தில் சந்தோஷ் குமார் படுத்திருப்பது, அவரது மனைவிகள் காலை பிடித்துவிடுவதும் போன்ற காட்சிகள் காண்போருக்கு கடும் ஆத்திரத்தை வரவழைக்கிறது.

பார்த்தாலே பிணி தீரும் என பில்டப் செய்த சந்தோஷ் குமாரை பார்க்க வந்தவர்களால் கெட்டி தொட்டியில் டிராபிக் பிரச்சனை ஏற்பட களத்தில் குதித்தது போலீஸ் டீம்...

விசாரணையில் சந்தோஷ்குமார் போலி சாமியார் என தெரியவர, போலிசாமியாரை தூக்கி சென்று தங்கள் பாணியில் அர்ச்சனை செய்து வருகிறார்கள் தெலுங்கானா போலீசார்....


Next Story

மேலும் செய்திகள்