"பேஸ்புக் ஒரு பயங்கரவாத அமைப்பு" - ரஷ்யா தடாலடி அறிவிப்பு
பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத இயக்கமாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான கருத்து பகிர்வு விவகாரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யா தடை விதித்தது. இதற்கு எதிரான மெட்டா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மாஸ்கோ நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. ரஷ்யாவில் மெட்டா தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்டாவை ரஷ்யா பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
Next Story