"விடுமுறையிலும்..." - ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு
விடுமுறையில் உள்ள மாணவர்கள் விவகாரத்தில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா ஒரு பள்ளியை திடீரென ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் நிலவரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிந்து வருகிறார். இந்த திட்டத்தின்படி ஐம்பதாவது பள்ளியாக, விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு நடுநிலை பள்ளியில் இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், விடுமுறையில் உள்ள மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, அவர்கள் அனைவரையும் பள்ளிகளுக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Next Story