ஈரோடு கிழக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை
நாம் தம ிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளர் கார்த்தி மற்றும் அவரது அண்ணன் கௌதம் இருவரும் முன்விரோதம் காரணமாக அவரது தாய் மாமனால் குத்தி கொலை செய்யப்பட்டார்கள்
ஈரோடு கிருஷ்ணசாமி வீதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி.
இவருடைய சகோதரர் ஆறுமுகச்சாமி.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேச்சுவார்த்தையின்றி வசித்து வந்த நிலையில், தனது அக்காவின் மகன்களான கெளதம் மற்றும் கார்த்திக்கிற்கு திடீரென போன் செய்து ஆறுமுகசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில், வீட்டிற்கே வந்து தகராறில் ஈடுபட்ட ஆறுமுகசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது அக்காவின் மகன்களை குத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த கார்த்திக், நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளராவார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக உள்ள ஆறுமுகசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.