ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரசாரம்
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்றார்.
காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பேருந்து நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரசார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே வாக்குசேகரிக்கிறார்.
Next Story