செல்லூர் ராஜுவை செல்லமாக தட்டிய அமைச்சர் பொன்முடி - ஈரோடு பிரச்சாரத்தில் ருசிகரம்
- ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை விமர்சித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, வாகனத்தில் இருந்து கீழே வந்ததும் அவருடன் நட்பு பாராட்டிப் பேசினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கள்ளுக்கடை மேடு, ஆலமரத்து வீதி ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
- அப்போது, நடிகர் கமல்ஹாசனின் பிரச்சார வருகை குறித்து செல்லூர் ராஜு விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டிப் பதில் அளித்தார்.
- பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே வந்ததும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்லூர் ராஜு இருந்ததை அறிந்து, அவரிடம் நேரில் சென்று பொன்முடி நட்பு பாராட்டினார்.
- நடிகர்கள் பற்றிய உங்களுடைய கருத்துக்குத்தான் பதில் கூறினேன் என்று கூறி, சிரித்துப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். இச்சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
Next Story