அடுத்த அதிரடி.. ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென்று சந்திக்கும் ஈபிஎஸ்.. பின்னணி என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கவுள்ளார்.
x

அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் சென்று ஆளுநரை சந்திக்கும் அவர், தமிழக சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.


இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்பில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நடந்த கொலை, கொள்ளை , சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை அவர் பட்டியலிட்டு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மாநில நலன் சார்ந்த கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்