"என்ன சொல்ல போகிறார் சபாநாயகர் அப்பாவு" - எகிறும் எதிர்பார்ப்பு
தமிழக சட்டப்பேரவை வரும் 17 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு ஈபிஎஸ்-ஒபிஎஸ் எழுதிய கடிதங்கள் மீது என்ன முடிவு எடுக்கப் போகிறார் என எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பி.எஸ் , ஈ.பி.எஸ் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை 17 ஆம் தேதி கூட உள்ளது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவுவிடம், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இரண்டு முறை கடிதங்களை வழங்கியுள்ளனர்.
ஓ.பி.எஸ் கொடுத்த கடிதத்தில், அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தம்மிடம் ஆலோசிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி. உதயகுமாரை அலுவல் ஆய்வு குழுவில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ்-க்கு சட்டப்பேரவையில் எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கப்படும் என்ற கேள்வி பேசு பொருளாகியுள்ளது.