ENG vs SA கடைசி டெஸ்ட் போட்டி | "God Save the King"- தேசிய கீதம் பாடிய இங்கிலாந்து ரசிகர்கள்
இங்கிலாந்தில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு நிகழ்வொன்றில் God Save the King தேசிய கீதம் பாடப்பட்டு உள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, புதிய மன்னராக சார்லஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், God Save the queen எனத் தொடங்கும் இங்கிலாந்து தேசிய கீதம், God Save the King என மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஓவலில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியின்போது "God Save the King" தேசிய கீதத்தை இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் உணர்வுப்பூர்வமாக பாடினர்.
Next Story