மாத தவணை கட்ட தவறிய நபரை, கொடூரமாய் தாக்கும் நிதி நிறுவன ஊழியர்கள் - வெளியான அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்..
விருதுநகரில் மாதத் தவணை கட்ட தாமதமானதால் கடன் பெற்ற நபரை நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சோலைராஜ். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்திடம் 60ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றதாக தெரிகிறது. ஆனால் இவர் மாத தவணையை கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சோலைராஜை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சோலைராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Next Story