அடுத்த அநாகரிகம்.. திருந்தாத எலான்..!"இஷ்டத்துக்கு பேசாதீங்க மஸ்க்" உண்மையை போட்டு உடைத்த டிரேசி.

x

நாகரிகக் குறைவானவர்கள் என சித்திரிக்கப்படும் பாமரர்கள்கூட, சோறு போட்டதை சொல்லிக்காட்டுவது அவமானம் என்றே கருதுவார்கள். ஆனால் ட்விட்டர் நிறுவனத்தில் இப்போது உணவுப் பிரச்னை உச்சகட்டப் பேச்சாக ஆகியிருக்கிறது.

மஸ்க்கின் வருகைக்குப் பின்னர் ட்விட்டர் பல அதிரடி மாற்றங்களையும், அதிரடி திருப்பங்களையும் சந்தித்து வருகிறது ட்விட்டர். எலான் மஸ்க்கின் பல நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்ப்போது இடம் பிடித்திருப்பது உணவு பிரச்சினை....

மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில், ட்விட்டர் நிறுவனத்தில் கடந்த 12 மாதங்களாக கிட்டத்தட்ட யாரும் அலுவலகம் வரவில்லை என்றும் ஆனால் ஒருவரின் ஒரு நேர மதிய உணவுக்காக அதிகபட்சம் 400 டாலர்வரை செலவிடப்பட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதை மறுத்துள்ள ட்விட்டரின் முன்னாள் துணைத்தலைவர் டிரேசி, கடந்த வாரம்வரை நான்தான் ஊழியர்களுக்கு உணவு வழங்கும் பணியை கவனித்து வந்தேன் என்றும், காலை, மதிய உணவு இரண்டுக்கும் சேர்த்து ஒருவருக்கு 20-25 டாலர்வரை செலவிடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இப்படி உணவு வழங்கப்பட்டதன் காரணமாக, 20 முதல் 50 சதவீதம்வரை ஊழியகள் வேலைக்கு வந்தனர் என்றும், உணவுநேரம், அலுவலகக் கூட்டங்கள் என தொடர்ச்சியாக நேரம்தாண்டி ஊழியர்கள் பணியாற்றினர் என்றும் டிரேசி தெரிவித்துள்ளார்.

டிரேசியின் இந்தத் தகவல் தவறானது எனக் கூறியுள்ள எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்தில் கடந்த ஆண்டில் உணவுக்காக 13 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது என்றும் அதிக பட்சமாக 25 சதவீதம் பணியாளர்களும் சராசரியாக 10 சதவீதம் பணியாளர்களும் வருகை தந்ததாகவும் தெரிவித் துள்ளார்.

மேலும், உணவு சாப்பிடுபவர்களைவிட உணவைத் தயாரித்து வழங்கியவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது என்றும் எலான் மஸ்க் கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்