எலன் மஸ்கின் அதிரடி முடிவுகள் எதிரொலி... ட்விட்டருக்கு முளைத்த புது சிக்கல்

x

உலகின் முதல் வரிசை செல்வந்தரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் அதன் தலைமை நிர்வாகிகள் மூன்று பேரை நீக்கினார். மொத்த ஊழியர்களில் பாதியளவுக்கு அதாவது 3,700 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் ட்விட்டரின் மதிப்பு தொடர் சரிவைக் கண்டது. இந்த நிலையில், பெரும் மோட்டார் வாகன நிறுவனங்களான போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை, ட்விட்டரில் விளம்பர இடம் வாங்குவதில்லை என அறிவித்துள்ளன.

ஓரியோவைத் தயாரிக்கும் மான்டெலஸ் இன்டர்நேசனல், ஆடி, ஜெனரல் மில்ஸ், ஃபைசர் ஆகிய நிறுவனங்களும், ட்விட்டர் விளம்பரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ட்விட்டரின் உள்ளடக்கக் கொள்கையை முடிவுசெய்ய குழு அமைக்கப்பட்டதுதான் இந்நிறுவனங்கள் பின்வாங்க காரணம் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்