எழும்பூர் டூ கடற்கரை ரயில் பாதை - ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்
சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4 புள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க மத்திய பட்ஜெட்டில் 96 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த பணிகள் காரணமாக, வரும் ஜூலை முதல் 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்யவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
புறநகர் மின்சார ரயில் சேவை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறுகள் அதிகம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
எனவே, பறக்கும் ரயில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதை தவிர்த்திடும் வகையில், நான்காவது வழிபாதை திட்டத்தை மாற்றியமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
Next Story