பிரதமர் மோடி தலைமையில் இன்று ஜி20 ஆலோசனை கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார் | G20 | PM Modi
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டின் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அழைப்பு விடுத்துள்ளது. இன்றைய தினம், ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காலை 11.30 மணிக்கு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். மாநாட்டுக்குப் பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி தனியாகச் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.