அரசு பள்ளி மாணவர்கள் செருப்பை எரித்த டிஎஸ்பி ? - திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முறையற்ற சிகை அலங்காரத்துடனும், உடை அணிந்தும் வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், அப்பள்ளி மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மோதிக்கொள்வது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரவிய நிலையில், ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மாணவர்களை டிஎஸ்பி கணேஷ்குமார் ஒருமையில் பேசி நடத்தியதாகவும், அவர்களின் காலணிகளை கைப்பற்றி தீயிலிட்டு கொளுத்தியதாகவும் கூறப்பட்டது....
Next Story