தலைக்கேறிய மதுபோதை.. மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து - பதறவைக்கும் சம்பவம்
சென்னையில் மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகவல்லி.
இவரின் கணவர் மணி. கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ள நிலையில் நாகவல்லி ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார்.
குடிபோதையில் மணி அவ்வப்போது மனைவியிடம் தகராறு செய்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.
சம்பவத்தன்றும் அதுபோல் குடிபோதையில் வந்த அவர், சண்டை போட்டதோடு தான் வைத்திருந்த கத்தியால் நாகவல்லியில் நெஞ்சில் குத்தினார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மணியை தேடி வருகின்றனர்.
Next Story