குடிபோதையில் தகராறு... தட்டி கேட்ட காவலருக்கு நடந்த பயங்கரம்
சென்னையில் மதுபோதையில் தலைமை காவலரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெற்றியூர் பலகை தொட்டி குப்பத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இரவு 11 மணி அளவில், இவரது வீட்டருகே தகராறில் ஈடுபட்ட மர்ம நபர்கள் காரில், பாட்டிலை வீசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை காவலர், இதுகுறித்து கேட்ட போது, மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுக்குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து தகராறில் ஈடுப்பட்ட கந்தவேல், ஜோசப், மணிகண்டன் பிரபு, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும், தப்பியோடிய டேவிட் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story