வேனிலிருந்து இறங்கிய 3 இளைஞர்கள்.. "தண்ணீ தண்ணீ" என கத்தும்போதே மயக்கம் - பரிசோதனையில் அம்பலம்
போச்சம்பள்ளி அருகே போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசியாக செலுத்திக் கொண்ட 3 இளைஞர்கள் மயங்கி விழுந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை கிராமத்தில், வேகமாக வந்த மினிவேனில் இருந்து இறங்கிய 3 இளைஞர்கள் தண்ணீர் என கத்திக் கொண்டே மயங்கி விழுந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, அவர்கள் மயக்கத்தில் இருப்பது தெரியவந்து.
இதையடுத்து அதே வேனில் அவர்களை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூவரும் போதையில் இருந்ததைக் கண்டறிந்தனர்.
தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார், இளைஞர்களிடம் விசாரணை நடத்தியபோது, கல்லாவி கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்கள், போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தியது தெரியவந்தது.
மயக்க நிலையில் இருந்த அவர்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.