"ஊரை கேட்க்காம இவ்ளோ பெரிய பள்ளம்".. | குடி தண்ணி எல்லாம் உப்பா இருக்கு..." - 2000 அடிக்கு போர் - கொந்தளித்த பொதுமக்கள்

x

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி, தென் ஓடாச்சேரி என்ற கிராமத்தில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு, கடந்த பல ஆண்டுகளாக மூன்று ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர், நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தென்ஓடாச்சேரியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் சீரமைப்பு மற்றும் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. 25 அடியில் குடிநீர் கிடைத்து வந்த நிலையில், ராட்சத போர்கள் அமைக்கப்பட்டு நாகப்பட்டினத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றதால் 200 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் இறங்கிவிட்டதாகவும், இதே நிலை நீடித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறி, பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்