"பேப்பரை பார்த்து படிக்காதீர்கள்" - சபாநாயகர் சொன்னதும் கொந்தளித்த ஈபிஎஸ் - பரபரப்பான அவை

x

சட்டப்பேரவையில் முழுமையாக பேப்பரைப் பார்த்து படிக்க வேண்டாம் என உறுப்பினர்களிடம் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பேப்பரை பார்த்து படித்தால் நேரம் அதிகம் ஆகும் என்றும், பேப்பரை பார்க்காமல் படிக்க முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், இப்போதெல்லாம் பெரும்பாலானோர் பேப்பர் பார்த்து தான் படிக்கிறார்கள் என ஆதங்கப்பட்டார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, குறிப்பில்லாமல் பேசுவதற்கு இது எக்ஸாம் இல்லை என்றார். அவரவர் அறிவுக்கு ஏற்றார் போல் தான் பேச முடியும் என்றும், எல்லாரும் அறிவாளியாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, பேப்பரை பார்க்காமல் பேசினால் தெளிவாக இருக்கும் என்பதாலும், சொல்ல வேண்டியதை விரைந்து சொல்ல முடியும் என்பதாலும் தான் அவ்வாறு பேசியதாகக் கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்