"இப்படியே விட்றாதீங்க.. அழைச்சி பேசுங்க முதல்வரே" - ஓபிஎஸ் வேண்டுகோள்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்குவாரி உரிமையாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், கட்டுமானத்துறை முடங்கக் கூடும் என்றும் தெரிவித்து உள்ளார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்துப் பேசி, சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story