"எங்க அக்காவ அடிக்கக் கூடாது...வெளிய போ..." - மழலை மொழியில் அம்மாவைத் திட்டும் சுட்டிச் சிறுவன்

x

"எங்க அக்காவ அடிக்கக் கூடாது...வெளிய போ..." - மழலை மொழியில் அம்மாவைத் திட்டும் சுட்டிச் சிறுவன்-"பாசக்கார தம்பி"...கண்கலங்க வைக்கும் சகோதர பாசம்...

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரத்தில் வீட்டுப்பாடம் எழுதாததால் மகளை அடிக்க வந்த தாயிடம் இருந்து தன் அக்காவை தம்பி ஒருவர் அடம்பிடித்து காப்பாற்றும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேணி - பெரிய பாண்டி தம்பதிக்கு பானு ஸ்ரீ என்ற மகளும், கிர்த்விக் என்ற 3 வயது மகனும் உள்ளனர்... பானுஸ்ரீ வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை என அவரை அடிக்க சென்ற வேணியை, சுட்டிச் சிறுவன் கிர்த்விக் தடுத்து நிறுத்த படாத பாடு பட்டார்...

அழுது கூக்குரலிட்டு தனது அம்மாவை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்து வெளியே அனுப்பி கதவை அடைத்து கிர்த்விக் நடத்திய பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்