விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை ஆங்காங்கே கடித்து வைத்த நாய்கள் - தென்காசியில் அதிர்ச்சி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து சிறுவர்களை நாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையாடிகொண்டிருந்த ஐந்து சிறுவர்களை நாய்கள் கடித்துள்ளன. அவர்கள் அனைவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்தப் பகுதிகளில் தொடர்ந்து ஏராளமானோரை நாய்கள் கடித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story