உண்மையில் அதானி முறைகேடு செய்தாரா?.. உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு பரபரப்பு ரிப்போர்ட்..!

x

ஜனவரி 24இல் அதானி குழுமத்தின் பங்கு சந்தை முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதன் விளைவாக அதானி குழும பங்குகள் விலைகள் வெகுவாக சரிந்து, முதலீட்டாளர்களுக்கு சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே

தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளியன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முறைகேடுகள் செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் இந்திய பங்கு சந்தைகள் ஒழுங்குமுறை ஆணையமான செபி அமைப்பினால் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. செபி அமைப்பின் செயல்பாடுகளிலும் தவறுகள், குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

173 பக்க அறிக்கையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறியுள்ளதாக சந்தேகம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளது. ஆனால் இத்தகைய சந்தேகங்களை நிருபிக்க போதுமான ஆதாரங்களை திரட்ட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை வெளியான பின், அதானி குழும பங்கு விலைகள் 3.3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்