காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் | DGP | SYLENDRABABU
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கையில், நீதிமன்றம் விதிக்கும் ஜாமின் நிபந்தனைகளை கொண்ட ஒரு பதிவேட்டை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பராமரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவற்றை பராமரிக்க இரண்டாம் நிலை அல்லது முதல் நிலை காவலர் அல்லது தலைமை காவலர் அந்தஸ்திலான அதிகாரியை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகள் நிறைவேற்றாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்புடைய அரசு குற்றவியல் வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஜாமின் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என சுற்றறிக்கையில் தமிழக டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.
Next Story