திருப்பதியில் குவியும் பக்தர்கள் - 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை | Thirupathi | ThanthiTV
கோடை விடுமுறை காரணமாக, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், 24 மணி நேரத்திற்குமேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன. இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள், சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. 300 ரூபாய் தரிசனத்திற்கு நான்கு மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
Next Story